Saturday, January 8, 2022

தமிழை பயிற்று மொழியாக கொண்ட பிளஸ் +2 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு

04.01.2022
சென்னை: தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதேபோல, கண்பார்வை அற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அரசு பள்ளியில் படிக்கும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,


தமிழகத்தில் அரசு வேலைக்காக காதுகேளாத & வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் 13,890 பேர் காத்திருப்பு..!



தமிழகத்தில் அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், 34,41,360 ஆண்களும், 38,89,715 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 227 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 19,09,646 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14,25,786 பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் 26,86,932 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 12,97,693 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,245 பேர் என தெரிவித்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளி பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியிட்டுள்ளது. மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1,38,698 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஆண்கள் 92,010 பேரும், பெண்கள் 46,688 பேரும் பதிவு செய்துள்ளனர்.

கை, கால் குறைபாடுடையோர் மொத்தம் 1,07871 பதிவு செய்துள்ளனர். அதில், 70909 ஆண்களும், 36,962 பெண்களும் பதிவு செய்துள்ளனர். விழிப்புலனிழந்தோர் மொத்தம் 16,937 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 11,668 ஆண்களும், 5,269 பெண்களும் பதிவு செய்துள்ளனர். காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,890 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 9,433 ஆண்களும், 4,457 பேர் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர் விபரம் சேகரிப்பு

07.01.2022
உடுமலை:நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் விபரம் பள்ளிகள் தோறும் கோரப்பட்டுள்ளது.பொதுத்தேர்வின் போது சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தங்களுக்கு தேர்வு எழுத உதவியாளர் உள்ளிட்ட ஏதேனும் சலுகைகள் தேவைப்பட்டால் தலைமையாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.நோயின் தன்மை, எந்த மாதிரியான சலுகைகள் தேவைப்படும் என்று உரிய மருத்துவ சான்றுடன் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில், தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுமாறு, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளிகளாக, 16 அரசு பள்ளிகள்; 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 15 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 4 சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதேபோல், நடுநிலைப்பள்ளிகளாக, 17 அரசுப்பள்ளிகள், 5 அரசு உதவிபெறும் பள்ளிகள், 18 மெட்ரிக் பள்ளிளக், 6 சுயநிதி பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகளில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களுக்கான தேர்வு எழுதுபவரை நியமிக்கலாம்.அவர்களுக்கு, தேர்வு எழுதுவதற்கான காலஅவகாசம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர், மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள், இரண்டு மொழிப்பாடங்களில், ஏதேனும் ஒன்றை மற்றும் தேர்ந்தெடுத்து எழுதலாம்.இதேபோல், நரம்பியல் கோளாறு, கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வின் போது கால்குலேட்டர், கிளார்க் அட்டவணை பயன்படுத்தலாம். 10ம் வகுப்பு மாற்றுத்திறனாளிகள் அறிவியல் செய்முறை தேர்வில் இருந்து விலக்கு அளிக்க அனுமதி கேட்கலாம். சலுகைகள் குறித்து மாணவர்களிடம் தலைமையாசிரியர்கள் எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.